விளையாட்டு
பங்களாதேஷை வீழ்த்திய மேற்கிந்திய தீவுகள்

Dec 9, 2024 - 12:29 PM -

0

பங்களாதேஷை வீழ்த்திய மேற்கிந்திய தீவுகள்

பங்களாதேஷ் அணிக்கு எதிராக இடம்பெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 5 விக்கட்டுக்களினால் வெற்றி பெற்றுள்ளது.


போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 50 ஓவர்களில் 6 விக்கட்டுக்களை இழந்து 294 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.


அவ்வணி சார்பாக அணித்தலைவர் மஹிடி ஹாசன் மிராஸ் 74 ஓட்டங்களையும், மஹ்மதுல்லா ஆட்டமிழக்காமல் 50 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.


இதனைத் தொடர்ந்து, 295 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 47.4 ஓவர்கள் நிறைவில் 5 விக்கட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.


மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில் Sherfane Rutherford 113 ஓட்டங்களையும் அணித்தலைவர் ஷாய் ஹொப் 86 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
 

Comments
0

MOST READ
01
02
03
04
05