Dec 10, 2024 - 03:05 PM -
0
உள்நாட்டு சுற்றுலா பயணிகளிடம் நகைகள் மற்றும் பணம் என்பவற்றை கொள்ளையிட்ட நபர் ஒருவரை காத்தான்குடி பொலிஸார் கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஏ எம் எஸ் ஏ ரஹீம் தெரிவித்தார்.
காலி ஜின்தோட்டையைச் சேர்ந்த 30 பேர் கொண்ட சுற்றுலா குழுவினர் காத்தான்குடி சுற்றுலா விடுதி ஒன்றில் தங்கியிருந்த போது சுற்றுலா விடுதியின் மதில் மேலால் உள்ளே நுழைந்து சுற்றுலாப் பயணிகளின் கைப்பையிருந்த பணம் மற்றும் அவர்களிடமிருந்த நகைகளை கொள்ளையிட்ட நபர் ஒருவரையே பொலிஸார் கைது செய்துள்ளனர்.
37 ஆயிரத்து 500 ரூபாய் மற்றும் 15,000 ஆயிரம் ரூபாய் என இருவரிடம் பணத்தையும் மேலும் சிலரிடம் நகைகளையும் கொள்ளை இட்டவுடன் மேலும் பலரிடம் அவர்கள் அணிந்திருந்த நகைகளையும் கொள்ளையிட்டுள்ளமை நகைகளை வாழைச்சேனையிலுள்ள நகைக்கடையில் விற்பனை செய்துள்ளதுடன் விற்பனை செய்த பணம் மற்றும் கொள்ளையிட்ட பணம் ஆகியவற்றிற்கு சந்தேகநபர் ஐஸ் போதைப்பொருளை வாங்கி பாவித்துள்ளமை தெரியவந்துள்ளது.
மீதமாயிருந்த இரு தங்க நகைகளை பொலிஸார் மீட்டுள்ளனர்.
43 வயதுடைய போதைப்போருள் பாவனைக்கு அடிமையான நபரை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதுடன் காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
--