Dec 11, 2024 - 04:22 PM -
0
வவுனியா, வேலங்குளம் பகுதியில் யானைத் தாக்கி முன்னாள் கிராம சேவகர் ஒருவர் மரணமடைந்துள்ளதாக பூவரசன்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா, வேலங்குளம் பகுதியில் வசித்த முன்னாள் கிராம சேவகரான குறித்த நபர் நேற்று (10) மாலை தனது மாட்டினை வீடு நோக்கி கொண்டு சென்ற போது வேலங்குளம் இராணுவ முகாமுக்கு அண்மையில் வீதிக்கு பிரவேசித்த யானை தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
சம்பவத்தில் முன்னாள் கிராம அலுவலரான மோகனகாந்தி என்பவரே மரணமடைந்தார்.
குறித்த யானை சுமார் மூன்று மணிநேரத்திற்கு மேலாக குறித்த பகுதியில் நின்று அட்டகாசம் புரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் அவ் வீதி வழியாக மக்கள் பயணம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.
சம்பவம் தொடர்பில் பூவரசன்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.