Dec 11, 2024 - 06:34 PM -
0
புறக்கோட்டை 5ஆம் குறுக்குத் தெருவில் உள்ள அரிசி மொத்த விற்பனைக் கடைகளில் நுகர்வோர் சேவை அதிகாரசபை அதிகாரிகள் இன்று (11) பிற்பகல் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
குறித்த கடைகளில் அரிசி மறைத்து வைப்பது உள்ளிட்ட முறைப்பாடுகள் கிடைத்ததைத் தொடர்ந்து குறித்த சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது, அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த கடையொன்றுக்கு எதிராக நுகர்வோர் சேவை அதிகாரசபை அதிகாரிகள் சட்ட நடவடிக்கை எடுத்திருந்தனர்.
இது தவிர, விலை காட்டப்படாதது மற்றும் காலாவதியான அரிசி விற்பனை செய்வது குறித்தும் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.