சினிமா
'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' படத்தின் வௌியீட்டு திகதி அறிவிப்பு

Dec 12, 2024 - 08:00 AM -

0

'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' படத்தின் வௌியீட்டு திகதி அறிவிப்பு

ராயன் திரைப்படத்தை தொடர்ந்து தனுஷ் 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.


படத்தின் முதல் பாடலான கோல்டன் ஸ்பேரோ கடந்த ஓகஸ்ட் 30 ஆம் திகதி வெளியானது. இப்பாடலில் நடிகை பிரியங்கா மோகன் கேமியோ ரோலில் நடித்திருக்கிறார்.


பாடல் வௌியானதில் இருந்தே நல்ல வரவேற்பை பெற்று வந்த நிலையில் தற்போது இப்பாடல் யூடியூபில் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.


இந்நிலையில், 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' படம், அடுத்தாண்டு பெப்ரவரி 7ஆம் திகதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.


இப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயண்ட்ஸ் மூவீஸ் நிறுவனம் வாங்கியுள்ளது.

Comments
0

MOST READ
01
02
03
04
05