செய்திகள்
வடக்கில் பரவிய காய்ச்சல் தொடர்பில் வௌியான தகவல்

Dec 12, 2024 - 11:46 AM -

0

வடக்கில் பரவிய காய்ச்சல் தொடர்பில் வௌியான தகவல்

யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் 7 பேரின் மரணத்திற்கு எலிக்காய்ச்சல் காரணமென உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


மாதிரிகளை பரிசோதித்த பின்னர் இது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு தெரிவித்துள்ளது.


தேசிய தொற்று நோயியல் பிரிவின் சமூக வைத்திய நிபுணர் துஷானி தம்பரேரா இது குறித்து கருத்து வௌியிடுகையில்,


காய்ச்சல் மற்றும் சுவாசக் கோளாறு காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகளில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.


"மேற்படி, 7 நோயாளர்களின் மாதிரிகள் மருத்துவ ஆய்வு நிறுவகம் மற்றும் கண்டி தேசிய வைத்தியசாலை ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் பரிசோதனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இவர்களில் சிலரது மாதிரிகள் லெப்டோஸ்பிரோசிஸ் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஏனையவர்களது மாதிரிகளின் பரிசோதனை நடவடிக்கைகள் நடந்து வருகின்றன."

Comments
0

MOST READ
01
02
03
04
05