செய்திகள்
ஆற்றில் மீன் பிடிக்கச் சென்றவர் உயிரிழப்பு

Dec 12, 2024 - 12:42 PM -

0

ஆற்றில் மீன் பிடிக்கச் சென்றவர் உயிரிழப்பு

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஆற்றில் மீன் பிடிக்கச் சென்றவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உழவனூர் பகுதியில் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தில் பணிபுரியும் உத்தியோகத்தரான கணேசமூர்த்தி குலேந்திரன் எனும் வயது 33 வயதுடைய இளம் குடும்பஸ்தரே இவ்வாறு பலியாகியுள்ளார்.


நேற்று (11) ஆற்றில் மீன்பிடிக்க சென்ற பொழுது வலிப்பு ஏற்பட்டதன் காரணமாக நீரில் மூர்த்தி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதாக ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.  


உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.


இச்சம்பவம் தொடர்பாக தர்மபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05