விளையாட்டு
உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற தமிழ்நாட்டின் குகேஷ்!

Dec 13, 2024 - 07:36 AM -

0

உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற தமிழ்நாட்டின் குகேஷ்!

இந்திய கிராண்ட்மாஸ்டர் குகேஷ், நடப்பு சாம்பியன் சீனாவின் டிங் லிரென் இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடைபெற்றது.

 

13 சுற்றுகள் முடிவில் குகேசும், லிரெனும் தலா இரண்டு சுற்றுகளில் வெற்றி பெற்று இருந்தார்கள். மற்ற அனைத்து சுற்றுகளும் டிராவில் முடிந்தன. இதனால், இருவரும் தலா 6½ புள்ளிகளுடன் சமநிலையில் இருந்தார்கள்.

 

இந்நிலையில், நேற்று 14 ஆவது மற்றும் கடைசி சுற்று நடந்தது. இதில் குகேஷ், கருப்பு நிற காய்களுடன் விளையாடி சீன வீரரை வீழ்த்தி உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றார். 58 ஆவது காய் நகர்த்தலுக்குப் பிறகு டிங் லிரென் தனது தோல்வியை ஒப்புக்கொண்டார். இதனால் 18 வயதில் உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று குகேஷ் சாதனைப் படைத்துள்ளார். 14 ஆவது சுற்றில் சுமார் 4 மணி நேரம் போராடி குகேஷ் வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிட்டதக்கது.

Comments
0

MOST READ
01
02
03
04
05