வடக்கு
கடமையினை பொறுப்பேற்ற ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்!

Dec 13, 2024 - 09:49 AM -

0

கடமையினை பொறுப்பேற்ற ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்!

யாழ்ப்பாணம் மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் இன்று (13) காலை 08.45 மணிக்கு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக உத்தியோகபூர்வமாகத் தமது கடமையினைப் பொறுப்பேற்றார்.

 

இந்நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினர் கருணாநாதன் இளங்குமரன், அரசாங்க அதிபரும் ஒருங்கிணைப்புக் குழுவின் செயலாளருமான திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் உடனிருந்தார்.

 

மேலும், கடமையேற்பு நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி), திட்டமிடல் பணிப்பாளர், உள்ளகக் கணக்காய்வாளர், நிர்வாக உத்தியோகத்தர் உள்ளிட்ட பதவிநிலை உத்தியோகத்தர்களும் உத்தியோகத்தர்களும் பங்குபற்றினார்கள்.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05