செய்திகள்
எல்ல - வெல்லவாய வீதியில் போக்குவரத்து தடை

Dec 13, 2024 - 10:12 PM -

0

எல்ல - வெல்லவாய வீதியில் போக்குவரத்து தடை

மரம் முறிந்து வீழ்ந்ததன் காரணமாக எல்ல - வெல்லவாய வீதி தடைப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

 

எல்ல-வெல்லவாய வீதியில்  10 ஆம் கம்பத்திற்கு அருகில் பாரிய மரம் ஒன்று வீழ்ந்துள்ளதாக அந்த நிலையம் தெரிவித்துள்ளது.

 

அத்துடன், எல்ல-வெல்லவாய வீதியின் கரந்தகொல்லே வீதியில் மின் கம்பம் ஒன்று சரிந்து வீழ்ந்தமையினால் வீதியின் ஒரு மருங்கின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

 
 


 

Comments
0

MOST READ
01
02
03
04
05