செய்திகள்
சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் எதிர்ப்பார்ப்பு

Dec 14, 2024 - 08:25 AM -

0

சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் எதிர்ப்பார்ப்பு

இந்த ஆண்டு சுமார் 1.9 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக  சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

 

டிசம்பர் மாதத்தில் மாத்திரம் 90,000 இற்கும் அதிகமானோர் வருகை தந்துள்ளதாக அதன் தலைவர்  புத்திக ஹேவாவசம் குறிப்பிட்டுள்ளார்.

 

டிசம்பர் மாதத்தில் மாத்திரம் 250,000 சுற்றுலாப் பயணிகள் வருவார்கள் என சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.

 

இந்த ஆண்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை 2.2 மில்லியன் என்ற இலக்கை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், அந்த இலக்கை எட்டிய பின்னர், 2018 ஆம் ஆண்டிற்கு பிறகு இரண்டு மில்லியன் இலக்கை எட்டுவது இதுவே முதல் முறையாகும் என்றும் அவர் கூறினார்.

 
 


 

Comments
0

MOST READ
01
02
03
04
05