Dec 14, 2024 - 11:08 AM -
0
பாகிஸ்தான் கிரிக்கட் அணியின் சகலதுறை வீரர் இமாட் வசீம் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளார்.
35 வயதான இமாட் வசீம் கடந்த ஆண்டும் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.
ஆனால் பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் தொடரில் அவர் சிறப்பாக செயல்பட்டு மூன்று முறை ஆட்டநாயகன் விருதை வென்றார்.
அதன் காரணமாக இமாட் வசீம் மீண்டும் சர்வதேச T20 போட்டிகளுக்காக அழைக்கப்பட்டார்.
அதன்படி, T20 உலகக்கிண்ண தொடரிலும் விளையாடினார்.
ஆனால், T20 உலகக்கிண்ண தொடரில் பாகிஸ்தான் அணி மோசமாக விளையாடியதால் முதல் சுற்றிலேயே போட்டியிலிருந்து விலக நேரிட்டது.
இமாட் வசீம் பாகிஸ்தானுக்காக 55 ஒருநாள் மற்றும் 75 T20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
பாகிஸ்தான் அணிக்காக அவர் மொத்தமாக 117 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து இரண்டாவது முறையாக ஓய்வு பெறுவதாக இமாட் வசீம் நேற்று குறிப்பிட்டார்.
ஆனால், இமாட் வசீம் தொடர்ந்து உள்நாட்டு போட்டிகள் மற்றும் லீக் போட்டிகளில் விளையாடுவார் என்றும் கூறப்படுகிறது.