Dec 14, 2024 - 11:47 AM -
0
பாகிஸ்தான் கிரிக்கட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மொஹமட் அமீர் சர்வதேச கிரிக்கட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
‘எக்ஸ்’ தளத்தில் பதிவொன்றை வௌியிட்டு அவர் தனது ஓய்வு குறித்து அறிவித்துள்ளார்.
இந்த கடினமான முடிவை எடுக்க வேண்டிய தருணம் இதுவெனவும், அடுத்த தலைமுறையினருக்கு வழிவிடும் வகையில் தான் ஓய்வு பெறுவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், பாகிஸ்தான் கிரிக்கட் சபை, குடுப்பத்தினர், நண்பர்கள் மற்றும் கிரிக்கட் ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் அவர் வௌியிட்டுள்ள 'எக்ஸ்' தள பதிவில் தெரிவித்துள்ளார்.
மொஹமட் அமீர் பாகிஸ்தான் கிரிக்கட் அணிக்காக 36 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 117 விக்கட்டுக்களையும், 61 ஒருநாள் போட்டிகளில் 81 விக்கட்டுக்களையும், 62 T20 போட்டிகளில் விளையாடி 71 விக்கட்டுக்களையும் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முன்னதாக பாகிஸ்தான் அணியின் சகலதுறை வீரர் இமாட் வசீமும் ஓய்வு முடிவை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
