Dec 14, 2024 - 12:28 PM -
0
போக்குந்தர - நிவந்திடிய பிரதேசத்தில் இலக்கத் தகடு இல்லாத மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் ஒருவர் லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வேரஹெர, கங்காராம, கஹட்டகஹவத்த பகுதியைச் சேர்ந்த மதுரங்க அசித பெர்னாண்டோ பெரேரா என்ற 30 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த நபர் சம்பவ தினத்தன்று தனது மோட்டார் சைக்கிளில் மஹரகமவில் இருந்து போகுந்தர நோக்கி வந்து கொண்டிருந்த போது, மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் வந்த லொறியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்துக்குள்ளான மோட்டார் சைக்கிள் இந்த நாட்டில் பதிவு செய்ய முடியாத அதிசக்தி வாய்ந்த மோட்டார் சைக்கிள் என பொலிஸார் சந்தேகம் வௌியிட்டுள்ளதோடு, இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பிலியந்தலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.