Dec 14, 2024 - 05:14 PM -
0
தலவாக்கலை மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் இன்று (14) காலை 10:30 மணி அளவில் பெண்ணின் சடலம் ஒன்று மிதந்ததையடுத்து அவதானித்த பிரதேச மக்கள் நீர்த்தேக்கத்தின் பாதுகாப்பு பிரிவு மற்றும் தலவாக்கலை பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் சடலத்தை கரை ஒதுக்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதுடன் சடலம் ஒரு பெண்ணுடையது என அடையாளம் காணப்பட்டுள்ளதோடு சடலம் தொடர்பான வேறு எந்த தகவல்களும் கிடைக்கவில்லை என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பாக தலவாக்கலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சடலமானது மேல் கொத்மலை நீர்த் தேக்கத்தின் நீர் வெளியேறும் வாயிற்கதவுக்கு அருகில் குப்பைகளுடன் ஒதுங்கி இருந்ததையே பிரதேச மக்கள் அவதானித்தமை குறிப்பிடத்தக்கது.
தற்பொழுது சடலம் நீதவான் விசாரணையின் பின்னர் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.
--