Dec 14, 2024 - 09:51 PM -
0
வெலிப்பன்ன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெலிப்பன்ன களஞ்சிய சந்தி பகுதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் உணவு பெறச் சென்றவர்களுக்கும் உணவக உரிமையாளர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் மூவர் காயமடைந்து களுத்துறை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெலிப்பன்ன பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று மாலை உணவு எடுப்பதற்காக மூன்று பேர் உணவகத்திற்குச் சென்ற போது கிடைத்த உணவு தொடர்பில் ஏற்பட்ட விவாதம் வாக்குவாதமாக மாறியதைத் தொடர்ந்து இந்த நிலைமை உருவாகியுள்ளது.
இதன்போது, கூரிய ஆயுதங்களைக் கொண்டு உணவக ஊழியர்கள் குறித்த மூவரையும் தாக்கியுள்ள நிலையில், காயமடைந்தவர்கள் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதுடன் தாக்குதலை மேற்கொண்ட மூவர் வெலிப்பன்ன பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவத்தில் வெலிபன்ன, தெனியாய மற்றும் இத்தபான பிரதேசங்களைச் சேர்ந்த மூவரே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய சந்தேக நபர்களை கண்டறிய மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.