உலகம்
கடலில் படகு கவிழ்ந்து 5 அகதிகள் பலி!

Dec 15, 2024 - 10:43 AM -

0

கடலில் படகு கவிழ்ந்து 5 அகதிகள் பலி!

கிரீஸ் நாட்டின் கடற்பகுதியில் அகதிகள் பயணித்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

 

கிரீஸ் நாட்டில் உள்ளதற்குத் தீவான கவ்டோஸ் பகுதியில் 13 ஆம் திகதி இரவு அகதிகளை ஏற்றி கொண்டுவந்த மரப் படகு கவிழ்ந்ததில் நீரில் மூழ்கி 5 பேர் உயிரிழந்ததாகவும் பலர் காணாமல் போயுள்ளதாகவும் கிரீஸ் கடலோர காவல்படை நேற்று (14) தெரிவித்துள்ளது.

 

சரக்கு கப்பல்கள் உதவியுடன் காணாமல் போனவர்களை மீட்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை மீட்கப்பட்டவர்களில் 29 பெண்கள் அடங்குவர். அகதிகளில் பெரும்பாலானோர் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.

 

காணாமல் போனவர்களின் சரியான எண்ணிக்கை தெரியாததால் மீட்புப் பணிகளில் சிரமம் ஏற்பட்டுள்ளது. சமீப காலமாக அகதிகள் படகு கவிழ்ந்து விபத்தில் சிக்கும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது.

Comments
0

MOST READ
01
02
03
04
05