செய்திகள்
தனியார் பேருந்து மோதியதில் ஒருவர் பலி

Dec 16, 2024 - 11:51 AM -

0

தனியார் பேருந்து மோதியதில் ஒருவர் பலி

யாழ்ப்பாணம் - இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  பெரியவிளான் பற்றிமா தேவாலயத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

 

நேற்று  இரவு 11.30 மணியளவில்  வீதியோரத்தில் இருந்த இருவர் மீது தனியார் பேருந்து மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

 

அப்பகுதியைச் சேர்ந்த 76  வயதான நபரும் அவரது மகனும் விபத்தில் படுகாயமடைந்தனர்.

 

பின்னர்  தெல்லிப்பழை வைத்தியசாலையில் அவர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில் தந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

 

அவரது மகன் படுகாயமடைந்த நிலையில், சிகிச்சைப் பெற்று வருகிறார்.

 

பேருந்தின் சாரதி தப்பியோடியுள்ள நிலையில், இளவாலை பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments
0

MOST READ
01
02
03
04
05