வடக்கு
பலசரக்கு கடைகளில் திருட்டு - மூவர் அடங்கிய கும்பல்!

Dec 16, 2024 - 02:57 PM -

0

பலசரக்கு கடைகளில் திருட்டு - மூவர் அடங்கிய கும்பல்!

யாழ்ப்பாணம் நகர் பகுதிகளை அண்மித்துள்ள பலசரக்கு கடையில் திருட்டுக்களில் ஈடுபடும் கும்பல்கள் தொடர்பான தகவல் கிடைத்ததா அறிய தருமாறு பொலிஸார் கோரியுள்ளனர்.

 

பலசரக்கு கடைகளுக்கு மூவர் அடங்கிய கும்பலாக சென்று, அங்கு பொருட்களை வாங்குவது போல பல பொருட்களை திருடி, தமது ஆடைகளுக்குள் மறைத்து எடுத்து செல்வது அங்குள்ள பாதுகாப்பு கண்காணிப்பு கமராக்களில் பதிவாகியுள்ளது.

 

இக்கும்பல் தொடர்ச்சியாக இவ்வாறான திருட்டுக்களில் ஈடுபட்டு வருவதனால், அவர்கள் தொடர்பான தகவல்கள் அறிந்தால், அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்குமாறு பொலிஸார் கோரியுள்ளன.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05