Dec 17, 2024 - 10:01 AM -
0
டி20 உலகக் கிண்ணத்தை இரண்டு முறை வென்ற ஒரே அணி தலைவர் என்ற சாதனையை டேரன் சமி நிகழ்த்தி இருந்தார்.
மேற்கிந்திய அணிகளின் கிரிக்கெட் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக முன்னாள் வீரர் டேரன் சமி நியமனம் செய்யப்பட்டுள்ளார். அடுத்தாண்டு ஏப்ரல் முதல் அவர் பொறுப்பேற்க உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.
இது தொடர்பாக செயின்ட் வின்சென்ட்டில் நடந்த காலாண்டு செய்தியாளர் மாநாட்டில் மேற்கிந்திய அணிகளின் கிரிக்கெட்டின் இயக்குனர் மைல்ஸ் பாஸ்கோம்ப் இதுதொடர்பான அறிவிப்பை வெளியிட்டார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
40 வயதான டேரன் சமி, கடந்த 2023 ஆம் ஆண்டு மேற்கிந்திய அணியின் ஒயிட்-பால் தலைமைப் பயிற்சியாளராகப் பொறுப்பேற்றார். முன்னதாக 2014 மற்றும் 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கிண்ண தொடரில் டேரன் சமி தலைமையிலான மேற்கிந்திய அணி அணி டி20 உலகக் கிண்ணத்தை வென்று சரித்திரம் படைத்தது குறிப்பிட்டதக்கது.