ஏனையவை
வலம்புரி மற்றும் மான் கொம்புகளுடன் ஐவர் கைது!

Dec 17, 2024 - 11:29 AM -

0

வலம்புரி மற்றும் மான் கொம்புகளுடன் ஐவர் கைது!

குருநாகல் மற்றும் அநுராதபுரம் அகிய பகுதிகளில் மேற்கொண்ட சுற்றி வளைப்பின் போது 16 இலட்சம் ரூபாய் பெறுமதியான வலம்புரி சங்குகள்  விஷேட சங்குகள் மற்றும் மான் கொம்புகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சந்தேகத்தின் பெயரில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

மீரிகம மற்றும் அநுராதபுரம் ஆகிய விமானப்படை புலனாய்ப் பிரிவினர்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த சுற்றிவளைப்புக்கள் முன்னெடுக்கப்பட்டன.

 

வலம்புரி சங்குகள் , விஷேட சங்குகள் மற்றும் மான் கொம்புகள் என்பவற்றை விற்பனை செய்யச் சென்ற போதே குறித்த ஐந்து சந்தேக நபர்களையும் வனஜீவராசித் திணைக்கள அதிகாரிகளும் பொலிஸ் அதிரடிப் படை அதிகாரிகளும் இணைந்த கைது செய்துள்ளனர்.

 

இந்த சுற்றி வளைப்புகளின் போது குருநாகல் வாரியாப்பொல பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று சந்தேக நபர்கள் 03 அடுக்கு கொண்ட மான் கொம்புகள் மற்றும் விஷேட சங்குகளை ஒரு இலட்சம் ரூபாவுக்கு விற்பனை செய்வதற்காக லொறி ஒன்றில்  வருகை தந்த  மூவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மேலும்,   அநுராதபுரம், ரம்பாவ பகுதியில் வைத்து வலம்புரி சங்குகள் மற்றும் விஷேட சங்குகளுடன் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் ஐவரும் பிணையில் விடுவிக்கப்பட்டதுடன் , அவர்களை நிக்காரெட்டிய மற்றும் அநுராதபுரதம் ஆகிய நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக வனஜீவராசித் திணைக்கள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05