செய்திகள்
விபத்தில் படுகாயமடைந்த யானை

Dec 17, 2024 - 01:51 PM -

0

விபத்தில் படுகாயமடைந்த யானை

செட்டிகுளம் - மன்னார் வீதியில் கூலர் வாகனத்துடன் மோதுண்ட யானை ஒன்று படுகாயமடைந்த நிலையில் வீதியருகில் விழுந்து கிடக்கின்றது.

 

இன்று (17) அதிகாலை இடம்பெற்ற இவ்விபத்து தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

 

வவுனியா, செட்டிகுளம் - மன்னார் வீதியில் உள்ள பெரியகட்டுப் பகுதியில் வீதியில் நின்ற யானை ஒன்றின் மீது மன்னாரில் இருந்து மதவாச்சி நோக்கி மீன்களை ஏற்றி அவ் வீதியால் வந்த கூலர் ரக வாகனம் மோதி விபத்துக்குள்ளானது.

 

இந்த விபத்தில் கூலர் வாகனம் கடுமையாக சேதமடைந்துள்ளதுடன் அதில் பயணித்த ஒருவரும் காயமடைந்துள்ளார்.

விபத்தில் காயமடைந்த யானை வீதியோரத்தில் உள்ள நீர் உள்ள குழி ஒன்றில் காயத்துடன் உயிருக்கு போராடி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

 

குறித்த சம்பவம் தொடர்பில் வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு பொது மக்களால் தகவல் வழங்கப்பட்டுள்ள நிலையில் வனஜீவராசிகள் திணைக்களத்தால் யானைக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பான விசாரணைகளை செட்டிகுளம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர். 



-வவுனியா தீபன்-

 
 


 

Comments
0

MOST READ
01
02
03
04
05