ஏனையவை
சர்வதேச மனக் கணிதப் போட்டியில் UCMAS மாணவர்கள் சாதனை!

Dec 17, 2024 - 02:00 PM -

0

சர்வதேச மனக் கணிதப் போட்டியில் UCMAS மாணவர்கள் சாதனை!

2024 ஆம் ஆண்டுக்கான மாபெரும் சர்வதேச மனக் கணிதப் போட்டியில் திஹாரிய யுசிமாஸ் நிலைய மாணவர் அணி சாதனை படைத்துள்ளது.

 

இந்தியாவின் தலைநகர் புது டில்லியில் குறித்த சர்வதேச மனக் கணிதப் போட்டி இம்மாதம் 14 ஆம் திகதி டில்லி பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் உலகளாவிய ரீதியில் 30 இற்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து சுமார் 6,000 மாணவர்கள் பங்குபற்றியிருந்தனர்.

 

இதில், இலங்கையை பிரதி நிதித்துவப்படுத்தும் வகையில்103 மாணவர்கள் சென்றிருந்ததோடு, முதல் தடவையாக திஹாரிய யுசிமாஸ் நிலையத்திலிருந்து 4 மாணவர்கள் பங்குபற்றியிருந்தனர்.

 

இதில் CAT Z (Basic) பிரிவில் ரிஷாதா ரிம்ஸான் செம்பியன் கிண்ணத்தையும், CAT Z (Basic) பிரிவில் ரீனா ரிஸ்மி செம்பியன் கிண்ணத்தையும், ⁠CAT A ( Elementary A) பிரிவில் நுஹா ஜலால்தீன் முதலாம் இடத்தையும் (1st Runner up), CAT B ( Elementary B) பிரிவில் அக்லா பௌஸுல் ஹமீட் முதலாம் இடத்தையும் (1st Runner up) பெற்று வெற்றி வாகை சூடினர். மேலும் மேற்படி மாணவர்கள் 10.08.2024 ஆம் திகதி கொழும்பு சுகத்ததாச உள்ளக அரங்கில் தேசிய ரீதியில் இடம்பெற்ற மனக்கணிதப் போட்டியின் அதிசிறந்த வெற்றியாளர்களுமாவர்.

 

பயிற்றுவிப்பாளர்களின் மாதக்கணக்கான அர்ப்பணிப்பும், அனுபவமும், பெற்றோர்களின் பாரிய ஆதரவும் இம்மாணவர்களின் வெற்றிக்கு வழிவகுத்துள்ளது.

 

30 இற்கும் மேற்பட்ட நாடுகள் பங்குபற்றிய சர்வதேச மனக் கணிதப் போட்டியில் திஹாரிய மண்ணின் மாணவர்கள் வெற்றி வாகைசூடி நாட்டுக்கும் நம் மண்ணுக்கும் பெருமை சேர்த்தமைக்கு வாழ்த்துகின்றோம் என்று IMECS மற்றும் யுசிமாஸ் திஹாரிய நிலையத்தின் பணிப்பாளர், பிரதம பயிற்சியாளர் மற்றும் பொறியியலாளர் பௌஸுல் ஹமீட் அவர்கள் தெரிவித்தார்.

Comments
0

MOST READ
01
02
03
04
05