வடக்கு
நெற்செய்கையை அழித்துவரும் யானைகள்!

Dec 17, 2024 - 03:42 PM -

0

நெற்செய்கையை அழித்துவரும் யானைகள்!

இரவு வேளைகளில் துழையும் யானைகள் நெற்செய்கையை  அழித்து வருவதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

 

கிளிநொச்சி கண்டவளை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கல்மடு குளத்தின் கீழ் பெரும்போக நெற்செய்கையில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் இவ்வாறு கவலை தெரிவிக்கின்றனர்.

 

70 நாட்கள் கடந்த நிலையில் உள்ள நெற் பயிர்களை இரவு வேளைகளில் காட்டு யானைகள் நெற்களை மேய்ந்து வருவதாகவும், ஒவ்வொரு வருடமும் இந்தக் காலப்பகுதியில் இவ்வாறு தாம் பாதிக்கப்பட்டு வருவதாகவும் கவலை தெரிவிக்கின்றனர்.

 

நெற் செய்கை மேற்கொள்ளப்பட்ட பகுதியில் இரவு பகலாக நித்திரை இன்றி காவல் காக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக ஒவ்வொரு வருடமும் நெற்செய்கையில் பெரும் நட்டத்தை எதிர்நோக்குவதாகவும் தெரிவிக்கின்றனர்.

 

இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தமது பகுதிக்கு வருகை தந்து நேரடியாக பார்வையிட்டு எமக்கான நிரந்தர தீர்வு ஒன்றினை பெற்று தர வேண்டுமென விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05