Dec 17, 2024 - 08:43 PM -
0
அம்பாறை மாவட்டத்தின் "திவுலபதன" கிராமத்தைச் சூழ அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு நிலைகளை அகற்றி மக்கள் சுதந்திரமாக வாழக்கூடிய சூழலை உருவாக்குவதற்காக நடவடிக்கை எடுக்க அரசாங்க அதிகாரிகளுக்கு உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர்நீதிமன்றம் இன்று (17) அனுமதி வழங்கியுள்ளது.
குறித்த மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ள கிழக்கு மாகாணத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர், சட்டமா அதிபர், இலங்கை மகாவலி அதிகார சபைக்கு அறிவித்தல் விடுக்கவும் உத்தரவிட்டார்.
பெங்கமுவே நாலக தேரர் மற்றும் எச்.எச். சுகதபால, ஆர்.எல்.ஆர்.ராஜபக்ஷ உள்ளிட்ட திவுலபத்தனை பிரதேச மக்கள் குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை பரிசீலித்த நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
பிரீதி பத்மன் சூரசேன, அச்சல வெங்கப்புலி மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு முன்பாக இந்த மனு பரிசீலிக்கப்பட்டது.
இதன் மூலம் மனுதாரர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதேச மக்களின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பு வழங்குமாறு சட்டத்தரணி நீதிமன்றில் கோரிக்கை விடுத்தார்.
இதையடுத்து மனு மீதான விசாரணை அடுத்த ஆண்டு செப்டம்பர் 10ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.