உலகம்
X தளத்தில் இனி Hashtag தேவையே இல்லை

Dec 18, 2024 - 06:02 PM -

0

X தளத்தில் இனி Hashtag தேவையே இல்லை

உலகின் பிரபல சமூக வலைத்தளமாக இருந்த டிவிட்டரை இரண்டு ஆண்டுகளுக்கு முன் உலக பணக்காரருக்கும், ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா நிறுவனருமான எலான் மஸ்க் விலைக்கு வாங்கினார்.


ட்விட்டரின் பெயரை எக்ஸ் [X] என்று மாற்றிய எலான் மஸ்க் பல உயர்மட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்து அந்த வலைத்தளத்தின் கட்டமைப்பிலேயே பல மாற்றங்களைக் கொண்டு வந்தார்.


காணொளி/குரல் அழைப்புகள், AI சாட்போட் gork உள்ளிட்ட அம்சங்களை எக்ஸ் தளத்தில் அறிமுகப்படுத்தினார்.


இந்நிலையில் எக்ஸ் தளத்தில் ஹேஸ்டேக் இடுகைகள் தேவையில்லாதது என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.


எக்ஸ் தளத்தில் பதிவுகளில் அது தொடர்புடைய ஹேஸ்டேக் களை இடுவதும், அது டிரண்ட் ஆவதும் முக்கிய அம்சமாக இருந்து வருகிறது, மேலும் இந்தக் குறிச்சொற்களைச் சேர்ப்பதன் மூலம் தலைப்புகள் மற்றும் இடுகைகளை எளிதாகத் தேட முடியும். இந்நிலையில் எலான் மஸ்க் அது தேவையே இல்லை என்று தெரிவித்துள்ளார்.


எக்ஸ் இல் ஹேஸ்டேக் போடலாமா வேண்டாமா என்ற பயனர் ஒருவரின் கேள்விக்கு கோர்ட் சாட்பாட் அளித்த பதிலை பகிர்ந்து மஸ்க் இந்த கருத்தை தெரிவித்துள்ளார். இனி சிஸ்டத்துக்கு ஹேஸ்டேக்குகள் தேவையில்லை, அதுமட்டுமில்லாமல் அவை பார்க்க அசிங்கமாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.


தளத்தில் என்ன ட்ரெண்டிங்கில் உள்ளது என்பதை அறிந்துகொல்வதற்கு வேறு ஏதும் வழியை எக்ஸ் தளம் உருவாகியிருக்கலாம் என்றும் அதன் காரணமாகவே மஸ்க் இவ்வாறு கூறியுள்ளார் என்று இணைய வல்லுநர்கள் கூறுகின்றனர். 

 

May be an image of text
 

Comments
0

MOST READ
01
02
03
04
05