Dec 19, 2024 - 10:10 AM -
0
டெஸ்ட் தரவரிசைப் பட்டியலை ஐசிசி வெளியிட்டது. இதில் துடுப்பாட்ட வீரர்களின் தரவரிசை பட்டியலில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் 895 புள்ளிகளுடன் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அபாரமாக செயல்பட்டதால், சக வீரரான ஹாரி புரூக்கை பின்னுக்குத் தள்ளி ஜோ ரூட் முதலிடத்திற்கு முன்னேறி அசத்தினார்.
ஹாரி புரூக் 876 புள்ளிகளுடன் 2 ஆவது இடத்தில் உள்ளார். நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் 867 புள்ளிகளுடன் 3 ஆவது இடத்தில் உள்ளார் .
அவுஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் 5 ஆவது இடத்தில் உள்ளார். இலங்கை வீரர் கமிந்து மெண்டிஸ் 6 ஆவது இடத்திலும் உள்ளார்.
இந்திய வீரர்கள் ஜெய்ஸ்வால் 4 ஆவது இடத்திலும் , ரிஷப் பண்ட் 9 ஆவது இடத்திலும் , சுப்மன் கில் 16 ஆவது இடத்திலும், விராட் கோலி 20 ஆவது இடத்திலும், ரோகித் சர்மா 30 ஆவது இடத்திலும் உள்ளனர்.