Dec 19, 2024 - 03:02 PM -
0
இலங்கை தமிழரசுக் கட்சியின் 75 ஆவது ஆண்டு நிறைவு தினத்தினை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்று வருகிறது.
இலங்கை தமிழரசுக்கட்சியின் பட்டிப்பளை பிரதேச கிளையின் ஏற்பாட்டில் 75 ஆவது அண்டு நிறைவு விழா கொக்கட்டிச்சோலையில் நடைபெற்றது.
பிரதேச கிளையின் தலைவர் செ.புஸ்பலிங்கம் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் செயலாளர் பொ.நேசதுரை, கடந்த பாராளுமன்ற தேர்தலின் தமிழரசுக் கட்சியின் வேட்பாளராக போட்டியிட்ட அருளம்பலம் கருணாகரன் மற்றும், பிரதேச வாலிபர் முன்னணி தலைவர், பிரதேச மகளீரணி தலைவி, மகளீரணி உறுப்பினர்கள், வட்டார கிளைகளின் பிரதிநிதிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
இதன் போது தந்தை செல்வாவின் திருவுருவப்படத்திற்கு ஈகச்சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.
அதனை தொடர்ந்து தமிழரசுக்கட்சியின் கடந்துவந்த பாதை அதன் செயற்பாடுகள் தொடர்பில் சிறப்புரைகளும் இடம்பெற்றன.