Dec 20, 2024 - 11:33 AM -
0
பங்களாதேஷ் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது T20 போட்டியில் பங்களாதேஷ் அணி 80 ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 189 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
அவ்வணி சார்பாக அதிகபட்சமாக ஜாகர் அலி 72 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.
இதனைத் தொடர்ந்து 190 என்ற வெற்றி இலக்கை நோக்கிய களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி 16.4 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து தோல்வியைத் தழுவியது.
பங்களாதேஷ் அணி இந்த வெற்றியின் ஊடாக 3 போட்டிகளைக் கொண்ட T20 தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.