Dec 21, 2024 - 07:13 AM -
0
பாகிஸ்தான் அணி மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக தென்ஆப்பிரிக்கா சென்றுள்ளது. தற்போது ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த 19 ஆம் திகதி நடைபெற்ற 2 ஆவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் 81 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முதல் போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. இதனால் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை 2-0 என வென்றுள்ளது. நாளை (22) 3 ஆவது மற்றும் கடைசி போட்டி நடைபெற இருக்கிறது.
இந்த தொடரை கைப்பற்றியதன் மூலம் பாகிஸ்தான் 21 ஆம் நூற்றாண்டில் தென்ஆப்பிரிக்காவில் 3 தொடர்களை வென்ற முதல் அணி என்ற சாதனையை படைத்துள்ளது.
இந்த சீசனில் பாகிஸ்தான் ஒருநாள் கிரிக்கெட் அணி கைப்பற்றிய 3 ஆவது தொடர் இதுவாகும். இதற்கு முன்னதாக அவுஸ்திரேலியா, ஜிம்பாப்வே அணிகளுக்கு எதிராக ஒருநாள் தொடரை வென்றுள்ளது. அத்துடன் தொடர்ச்சியாக 5 தொடர்களை வென்று அசத்தியுள்ளது.