செய்திகள்
யாழில். துவிச்சக்கர வண்டிகளை திருடிய நபர் கைது

Dec 21, 2024 - 10:27 PM -

0

யாழில். துவிச்சக்கர வண்டிகளை திருடிய நபர் கைது

யாழ்ப்பாணம் - வடமராட்சியின் பல்வேறு பகுதிகளில் துவிச்சக்கர வண்டிகளை திருடிய நபரொருவர் இன்று (21) பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டார்.


கரணவாய் பகுதியைச் சேர்ந்த 23 வயதானவரே காங்கேசன்துறை மாவட்ட பொலிஸ் குற்றதடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி மு.உதயானந் தலைமையிலான குழுவினரால் கைதுசெய்யப்பட்டார்.


களவுச் சம்பவமொன்று தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் நடத்தப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது பல்வேறு பகுதிகளிலும் துவிச்சக்கர வண்டிகளை திருடிய சம்பவங்களுடன் சந்தேகநபர் தொடர்புபட்டமை தெரியவந்தது.


இதனையடுத்து சந்தேக நபர் வழங்கிய தகவலுக்கமைய 12 துவிச்சக்கர வண்டிகள் மீட்கப்பட்டது.


கைதான சந்தேக நபரையும் கைப்பற்றப்பட்ட துவிச்சக்கர வண்டிகளையும் நெல்லியடி பொலிஸார் ஊடாக பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 

--

Comments
0

MOST READ
01
02
03
04
05