கிழக்கு
மாகாணசபை தேர்தலை நடாத்துவதாக ஜனாதிபதி உறுதி!

Dec 22, 2024 - 11:30 AM -

0

மாகாணசபை தேர்தலை நடாத்துவதாக ஜனாதிபதி உறுதி!

எதிர்வரும் சித்திரை மாதத்திற்கு மாகாணசபை தேர்தல் தொடர்பான சட்ட சீர்திருத்தம் ஒன்றை கொண்டுவந்த பின்னர் உடனடியாக மாகாணசபை தேர்தலை நடாத்துவதாக ஜனாதிபதி தங்களிடம் உறுதியளித்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட இலங்கை தமிழரசுக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

 

இலங்கை தமிழரசுக்கட்சி ஆரம்பிக்கப்பட்டு 75 ஆவது ஆண்டு நிறைவினை குறிக்கும் வகையிலான பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.

 

மட்டக்களப்பு நகரில் உள்ள இலங்கை தமிழரசுக்கட்சியின் ஸ்தாபக தலைவா தந்தை செல்வா பூங்காவில் உள்ள அன்னாரின் சிலையருகே நேற்று (21) இலங்கை தமிழரசுக்கட்சி ஆரம்பிக்கப்பட்டு 75 ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வு நடைபெற்றது.

 

இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட கிளையின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சாணக்கியன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், இ.சிறிநாத், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன், முன்னாள் பிரதேசசபை தவிசாளர்கள், உறுப்பினர்கள்,கட்சியின் மகளிர்,இளைஞர் அணியினர் என பலர் கலந்துகொண்டனர்.

 

இந்த நிகழ்வின் போது தந்தை செல்வாவின் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

 

இம்முறை இலங்கை தமிழரசுக்கட்சியின் 75வது நிறைவு ஆண்டினை குறிக்கும் பவள விழாவினை மட்டக்களப்பில் நடாத்துவது என மட்டக்களப்பு மாவட்ட கிளையின் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றினை மத்திய குழு கூட்டத்திற்கு கொண்டு சென்று மட்டக்களப்பில் சிறப்பாக நடாத்தவுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்தார்.

 

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,

 

இன்று மட்டக்களப்பு மாவட்ட கிளையின் முதலாவது கூட்டம் தேர்தலில் பிற்பாடு இன்று நடத்தியிருந்தோம்.எதிர்வரும் காலத்தில் எங்களுடைய 25 ஆம் திகதி மாமனிதர் யோசப்பராஜ சிங்கம் அவர்களுடைய நினைவு தினம் தொடர்பாக வாலிபர் முன்னணியின் தலைவர் இவ்வாறான நிகழ்வினை ஏற்பாடு செய்திருக்கின்றார்கள் என்பதை தெளிவுபடுத்துகிறார்கள் அத்தோடு எதிர்வரும் ஜனவரி மாதம் பொங்கல் வவுணதீவுபிரதேசத்தில் நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளோம்.

 

அத்தோடு கட்சியினுடைய செயற்பாடுகள் உள்ளூராட்சி மன்ற தேர்தல் மாகாண சபை தேர்தல் போன்றவற்றை எவ்வாறு எதிர்கொள்வது என்பது பற்றியும் நாங்கள் பேசி இருந்தோம்.

 

கட்சி ஆரம்பித்து 75 வருடங்கள் பூர்த்தியா இருக்கின்ற இந்த நேரத்தில் டிசம்பர் மாதம் 18ஆம் தேதி அன்று பாராளுமன்றத்திற்கு செல்லும் வேலை திட்டங்கள் மற்றும் கட்சியினுடைய ஏனைய முக்கியஸ்தர்களுக்கு விடுமுறை நாள் அன்று அதை பொருத்தமாக இருக்கும் அந்த நிகழ்வினை செய்தால் அந்த அடிப்படையில் இன்று ஒரு அடையாளமாக தந்தை செல்வா அவர்களின் சிலைக்கு மலர் மாலை அணிவித்து நாங்கள் நிகழ்வை செய்திருக்கின்றோம்.

 

இன்று மாவட்ட கிளை கூட்டத்தில் நான் ஒரு பிரேரணையை முன் வைத்திருந்தேன் அந்த பிரேரணைக்கு மாவட்டத்தினுடைய அங்கீகாரம் கிடைத்திருந்தது அதாவது 75 ஆவது பவள விழா நிகழ்வு ஒன்றை இலங்கை தமிழரசு கட்சி முன்னெடுப்பதாக இருந்தால் அந்த நிகழ்வை மட்டக்களப்பிலே நடத்துவதற்கு அனுமதி தருமாறு கட்சியிடம் ஒரு கோரிக்கை முன் வைப்பதாக ஒரு தீர்மானம் ஒன்றை எடுத்திருந்தோம்.

ஏனென்றால் பல காரணங்கள் இருக்கின்றது கடந்த தேர்தல் முடிவுகளும் அதன் ஒரு காரணமாக என் மனதில் வைத்து தான் அதனை அந்த பிரேரணையை முன்வைத்திருந்தேன் அந்த வகையில் இலங்கை தமிழரசு கட்சியினுடைய பவள விழா நடத்துவதாக இருந்தால் அந்தப் பொறுப்பை நாங்கள் எடுத்து நாங்கள் செய்வதற்கு தயார் அந்த பொறுப்பை எங்களுக்கு தருமாறு எதிர்வரும் கட்சியில் அடுத்த அடுத்த கூட்டங்களில் அதனை முன் வைக்க இருக்கின்றோம்.

 

பல விடயங்கள் சமகாலவு அரசியல் விடயங்கள் எல்லாம் பேசுவதற்கு இருக்கின்றது ஆனால்  இன்று அதற்கான நேரம் அல்ல நான் எதிர்வரும் வாரத்திற்குள் ஒரு ஊடக சந்திப்பை நடத்தி சமகால அரசியல் தொடர்பாக கருத்தையும் முன்வைக்க இருக்கின்றேன்.

 

எமது நாட்டில் ஜனாதிபதி புதிதாக தெரிவாகினால் அவர் இந்தியா சென்று வருவது வழமை ரணில் விக்கிரமசிங்க கோட்டபாய ராஜபக்ஷ ஆகியோரும் சென்று வந்துள்ளனர் நாங்கள் தமிழரசு கட்சியாக பாராளுமன்ற குழுவாக ஜனாதிபதி அவர்களை அவருடைய இந்திய விஜயதிற்கு பின்னர் சந்திக்காவிட்டாலும் கூட கடந்த வாரம் பாராளுமன்றத்தில் வேறு ஒரு நிகழ்வு தொடர்பாக அவரை சந்தித்தபோது அவரிடம் கலந்துரையாடுவதற்கு சந்தர்ப்பம் கிடைத்தது.

 

அவரிடம் நான் நேரடியாக கேட்டிருந்தேன். மகன சபை தேர்தல் நீங்கள் பாரத பிரதமருடன் பேசியபோது இரண்டு பேரும் கூட்டாக இணைந்து முன்வைத்த ஊடக அறிக்கையில் இல்லாது விட்டாலும் கூட பாரத பிரதமருடைய ஊடக அறிக்கையில் இலங்கையில் தமிழ் மக்களுடைய அரசியல் அவிலாசைகள் பூர்த்தி அடைய வேண்டும் அரசியல் சாசனம் முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் மாகாண சபை தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று பாரத பிரதமருடைய ஊடக அறிக்கையில் இருந்தது.

 

அதற்கு அமைவாக நீங்களும் அதனை நடத்துவதாக கூறி இருக்கின்றீர்கள் அவ்வாறு மாகாண சபை தேர்தல் நடத்துவதாக இருந்தால் அனைவருக்கும் தெரியும் இலங்கையில் மாகாண சபை தேர்தல் சட்டத்தில் ஒரு சிறிய திருத்தம் ஒன்றை நாங்கள் செய்ய வேண்டும் நாங்கள் பழைய மாகாண சபை தேர்தல் முறைக்கு செல்வதாக இருந்தால் அதாவது 2017 ஆம் ஆண்டு காலப்பகுதியிலே மாகாண சபையை முறைமையை மாற்றி அமைக்க அதாவது தேர்தல் முறை கலப்பு முறைக்கு செல்வதாக விகிதாசார அடிப்படை மாத்திரமில்லாத போன்ற விடயங்களில் பல குழப்பங்கள் ஏற்பட்டு இவ்வாறு மாகாண சபை தேர்தல் நடத்துவதற்கு இன்றும் கூட மாகாண சபை தேர்தல் சட்ட ரீதியாக நடத்த முடியாத சட்ட சிக்கல் காணப்படுகிறது.

 

இதை நிவர்த்தி செய்வதற்காக பழைய தேர்தல் முறைக்கு செல்ல வேண்டும் அந்த பழைய தேர்தல் முறைக்கு செல்வதற்கு சிறிய திருத்தம் பாராளுமன்றத்தில் செய்ய வேண்டும் அந்த சிறிய திருத்தம் செய்வதற்காக 09 ஆவது பாராளுமன்றத்திலே முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்கள் ஒரு தனிநபர் பிரேரணை ஒன்றை முன்வைத்து இறுதிநாள் மூன்றாவது வாசிப்பு அது அமலுக்கு வரும் வாய்ப்பு இருந்த அந்த தருணத்தில் ரணில் விக்ரமசிங்க அதனை அன்றைய நாளுக்குரிய பாராளுமன்ற நடவடிக்கையில் இருந்து அதனை அகற்றியதன் விளைவாக அது நிறைவேற்றப்படவில்லை.

 

அந்த வகையில் மீண்டும் ஒரு சட்டமூலம் கொண்டு வந்து அது நிறைவேற்றப்பட வேண்டும் இலங்கை தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடி போது நாங்கள் இந்த விடையை தொடர்பாக கேட்டோம் இதை நீங்கள் செய்வீர்களா அரசாங்கம் இந்த சட்டமூலத்தை கொண்டு வருமா இல்லாவிட்டால் ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் கொண்டு வந்தது போல் தனிநபர் பிரேரணை கொண்டுவரவா என கேட்டபோது அவர் கூறினார் நான் அவ்விடம் தொடர்பாக கூறுகின்றேன் என்றார்.

 

ஜனாதிபதியை அண்மையில் சந்தித்தபோது நான் அவரிடம் கேட்டு இருந்தேன் நீங்கள் அன்று இந்த விடயம் தொடர்பாக கூறுகின்றேன் என தெரிவித்தீர்கள் ஆனால் பாரத பிரதமர் உங்களுடைய நிலைப்பாடு என்ன என்று கேட்டபோது அரசாங்கம் ஒரு சட்ட மூலமாக கொண்டு வருவதாக தெரிவித்து இருந்தார் நான் அதற்கு கேட்டிருந்தேன் அதனை ஏன் நீங்கள் அடுத்த பாராளுமன்ற அமர்வு நடைபெறும் போது ஏன் அந்த முறையை ஆரம்பிக்க கூடாது ஏனென்றால் அது நீதிமன்றத்திற்கு சென்று வர வேண்டும் என்று கேட்டு இருந்தேன்.

 

அதற்கு அவர் இல்லை முதலாவதாக உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடாத்துவோம் மாகாண சபை தேர்தல் நடத்துவதற்கான சட்ட திருத்தம் வந்தால் மாகாண சபை தேர்தலையும் உடனடியாக நடத்த கூறியும் ஒரு கோஷம் வரும் சித்திரை முடிந்ததன் பிற்பாடு அந்த சட்டமூலத்தை பாராளுமன்றத்திற்கு கொண்டு வந்து அதன் ஊடாக மாகாண சபை தேர்தலை நடத்தக்கூடிய வகையில் அந்த சட்டத்தை நிறைவேற்றிய தன் பிற்பாடு நிச்சயமாக மாகாண சபை தேர்தலை நடத்துவேன் என கூறியிருந்தார்.

 

ஜனாதிபதியின் உடைய இந்திய இதயத்தை பற்றி தமிழ் மக்களாகிய எங்களுக்கு மிக முக்கியமானது இந்த தமிழ் மக்களின் அரசியல் தீர்வு விடயம் அதில் மாகாண சபை தேர்தல் நடத்துவது என்பது முக்கியமான விடயம் இந்த விடயத்தை பற்றி தான் நான் முக்கியமாக பேசியிருந்தேன்.

 

ஆனால் அரசியல் தீர்வு பற்றிய விடயத்தில் இன்னும் ஒரு தெளிவான நிலைப்பாட்டை கூறவில்லை மிக விரைவாக இது எப்போது ஆரம்பிக்க போகின்றார்கள் இப்போது முடிக்க போகின்றார்கள் என்று அவர்கள் நாங்கள் புதிய அரசாங்கம் காலம் வேண்டும் என்று கூற முடியாது என தெரிவித்தார்.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05