செய்திகள்
இலஞ்சம் பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது

Dec 24, 2024 - 01:11 PM -

0

இலஞ்சம் பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது

இலஞ்சம் பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

தம்பலகமுவ பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் பணத் தகராறு தொடர்பில் திருகோணமலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை செய்துள்ளார்.

 

முறைப்பாட்டை விசாரித்து, முறைப்பாட்டாளருக்கு தர வேண்டிய பணத்தை பெற்றுத்தர தேவையான ஏற்பாடுகளை செய்து தர முடியும் என கூறி, அதற்காக ஐயாயிரம் ரூபாவை இலஞ்சமாக சந்தேகநபரான பொலிஸ் உத்தியோகத்தர் கேட்டுள்ளார்.

 

அதன்படி கடந்த 23ஆம் திகதி திருகோணமலை பொலிஸ் நிலையத்தின் பல்வேறு முறைப்பாடுகள் விசாரணைப் பிரிவில்  சமூக பொலிஸ் பிரிவில் கடமையாற்றிய பொலிஸ் சார்ஜென்ட் ஒருவர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

 

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் திருகோணமலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

 
 


 

Comments
0

MOST READ
01
02
03
04
05