Dec 24, 2024 - 01:56 PM -
0
எதிர்வரும் ஜனவரி 01 ஆம் திகதி முதல் ஓய்வூதிய பணிப்பாளர் நாயகம் பதவிக்கு இலங்கை நிர்வாக சேவையின் விசேட தர அதிகாரி சாமிந்த ஹெட்டியாராச்சி நியமிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தற்போது இவர் திருகோணமலை மாவட்ட செயலாளராக பணியாற்றி வருகிறார்.
ஓய்வூதியப் பணிப்பாளர் நாயகமாக கடமையாற்றும் ஜெகத் டி.டயஸ் 2024.12.31 அன்று ஓய்வுபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.