மலையகம்
154 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம்!

Dec 24, 2024 - 03:53 PM -

0

154 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம்!

இவர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று (23) சப்ரகமுவ மாகாண ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்ன தலைமையில் சப்ரகமுவ மாகாண சபையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

 

இலங்கையின் ஆசிரியர் சேவைக்கு சப்ரகமுவ மாகாண அரச சேவைகள் ஆணைக்குழுவினால் இவ்வருடம் (07.04.2024) நடாத்தப்பட்ட போட்டிப் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில் இந்த ஆட்சேர்ப்புகள் இடம்பெற்றுள்ளது.

 

இந்நிகழ்வில், பெருந்தோட்ட சமூக அபிவிருத்தி பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் , இரத்தினபுரி மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சாந்த பத்மகுமார, இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ராஜபக்ச, சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் புஷ்பகுமார திஸாநாயக்க, சப்ரகமு மாகாண பிரதம செயலாளர் மஹிந்த எஸ்.வீரசூரிய, மாகாணக்கல்வி அமைச்சின் செயலாளர் சாமர பமுனு ஆராச்சி, மாகாணக் கல்விப் பணிப்பாளர் தர்ஷினி இந்தமல்கொட உட்பட அரச அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05