வடக்கு
மதுபான கடைகளை நிரந்தரமாக மூடுமாறு வலியுறுத்தி போராட்டம்!

Dec 24, 2024 - 04:18 PM -

0

மதுபான கடைகளை நிரந்தரமாக மூடுமாறு வலியுறுத்தி போராட்டம்!

கிளிநொச்சி மாவட்டத்தில் அதிகரித்த மதுபான கடைகளை நிரந்தரமாக மூடுமாறு வலியுறுத்தி போராட்டம் ஒன்று இன்று (24) கிளிநொச்சியில் இடம் பெற்றது.

 

குறித்த ஆர்ப்பாட்டப் பேரணி கிளிநொச்சி டிப்போ சந்தியில் ஆரம்பமாகி மாவட்ட செயலகம் வரை முன்னெடுக்கப்பட்டது.

 

மதுபோதைக்கு எதிரான இயக்கம் மற்றும் வடக்கு கிழக்கு மறுவாழ்வு அமைப்பின் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

 

குறித்த போராட்டத்தில் சர்வ மதத்தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

இதன் போது, கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்கதிபர் எஸ்-முரளீதரனிடம் ஜனாதிபதிக்கு கையளிக்குமாறு மகஜர் ஒன்றும் கையளித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05