மலையகம்
மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட மூவர் கைது

Dec 24, 2024 - 06:43 PM -

0

மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட மூவர் கைது

காசல்ரீ நீர்த்தேக்கத்திற்கு நீர் ஏந்தி செல்லும் நோர்வூட் கேசல்கமுவ ஓயாவில் சட்ட விரோத மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டு வந்த மூவர் நோர்வூட் பொலிஸார் கைது செய்துள்ளனர்.


குறித்த சம்பவம் இன்று (24) பிற்பகல் 1 மணியளவில் இடம் பெற்றதாக நோர்வூட் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


நோர்வூட் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய மேற்கொண்ட சுற்றிவலைப்பின் போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.


சட்டவிரோத மாணிக்ககல் அகழ்விற்கு பயன்படுத்தப்பட்ட நீர் இறைக்கும் மோட்டார் மற்றும் எனைய உபகரணங்களையும் மீட்டுள்ளதோடு கைது செய்யப்பட்டவர்கள் கம்பளை, பொகவந்தலாவ, எம்பிலிபிட்டிய ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.


சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

--

Comments
0

MOST READ