உலகம்
அமெரிக்காவின் தேசிய பறவையாக வெண்தலைக் கழுகு அறிவிப்பு

Dec 25, 2024 - 03:57 PM -

0

அமெரிக்காவின் தேசிய பறவையாக வெண்தலைக் கழுகு அறிவிப்பு

வழுக்கை கழுகு (Bald Eagle) வட அமெரிக்காவில் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. தலைப்பகுதியில் வெள்ளை நிறம் கொண்டுள்ள இந்த கழுகு அமெரிக்காவில் சக்தி மற்றும் வலிமையின் அடையாளமாக கருதப்படுகிறது. அமெரிக்க வரலாற்றுடன் வெண்தலைக் கழுகுகளுக்கு 240 ஆண்டுகளுக்கு மேல் தொடர்பு உள்ளது.


இதையடுத்து, வெண்தலைக் கழுகை அமெரிக்காவின் தேசிய பறவையாக அறிவிக்க வேண்டுமென கோரிக்கை எழுந்து வந்தது.


இந்நிலையில், வெண்தலைக் கழுகு அமெரிக்காவின் தேசிய பறவையாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இதற்கான மசோதாவிற்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஒப்புதல் அளித்துள்ளார். இதன் மூலம் வெண்தலைக் கழுகு அமெரிக்காவின் தேசிய பறவையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

Comments
0

MOST READ
01
02
03
04
05