Dec 25, 2024 - 05:02 PM -
0
2021ஆம் ஆண்டு தாலிபான்கள் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றியது முதல் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்திற்கு இடையே எல்லைப் பிரச்சினைகள் அதிகரித்து வருகின்றன.
குறிப்பாக, பாகிஸ்தான் அதன் மேற்கு எல்லைப் பகுதிகளில் மீண்டும் தீவிரவாத வன்முறையுடன் போராடி வருகிறது.
இந்த நிலையில், ஆப்கானிஸ்தானின் பாக்டிகா மாகாணத்தின் பர்மால் மாவட்டத்தில் பாகிஸ்தான் நான்கு இடங்களில் குறிவைத்து வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதில் குழந்தைகள் மற்றும் பெண்கள் உள்பட இதுவரை 46 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காயமடைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 18 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இன்னொரு குடும்பத்தில் 5 பேர் கொல்லப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 7 கிராமங்கள் குறிவைத்து அழிக்கப்பட்டுள்ளன. இதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என தலிபான் அரசாங்க துணை செய்தித் தொடர்பாளர் ஹம்துல்லா ஃபிட்ராத் தெரிவித்துள்ளார்.
மார்ச் மாதத்திற்குப் பிறகு பாகிஸ்தான் தாலிபன்களின் மறைவிடங்கள் மீது நடத்தப்படும் இரண்டாவது தாக்குதல் இதுவாகும்.
இதை தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் அமைப்பினர் நடத்தியதாகவும், அதில் 16 வீரர்கள் கொல்லப்பட்டதாகவும் பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பாகிஸ்தான், “காபூலில், தாலிபன் அதிகாரிகள் சிலர் தீவிரவாத போராளிகளுக்கு புகலிடம் அளித்து, அவர்கள் மூலம் அனுமதியின்றி பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்” எனத் தெரிவித்துள்ளது. ஆனால், இந்தக் குற்றச்சாட்டை ஆப்கானிஸ்தான் மறுத்துள்ளது.