விளையாட்டு
அஸ்வின் சாதனையை சமன் செய்த பும்ரா

Dec 26, 2024 - 09:43 AM -

0

அஸ்வின் சாதனையை சமன் செய்த பும்ரா

இந்தியா, அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரில் 3 போட்டிகளில் விளையாடி 21 விக்கெட்டுகளை பும்ரா கைப்பற்றி உள்ளார். இதன்மூலம் இந்த தொடரில் அதிக விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளர்களில் அவர் முதலிடத்தில் உள்ளார்.

 

பிரிஸ்பேன் போட்டியில் 9 விக்கெட் கைப்பற்றிய பும்ரா, அதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் 14 புள்ளிகளை கூடுதலாக பெற்று 904 புள்ளிகளை எட்டி அசத்தியுள்ளார். ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் பும்ரா தற்போது முதலிடத்தில் உள்ளார்.

 

இந்நிலையில், ஐ.சி.சி. டெஸ்ட் கிரிக்கெட் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் இந்திய வீரர் பும்ரா 904 புள்ளிகளைப் பெற்றார். 900 புள்ளிகளைக் கடந்த இரண்டாவது இந்திய பவுலர் என்ற சாதனையை பும்ரா படைத்துள்ளார். இதன்மூலம் அஸ்வினின் சாதனையை பும்ரா சமன் செய்துள்ளார். கடந்த 2016 இல் அஸ்வின் இதை எட்டி இருந்தார்.

 

மேலும், ஐ.சி.சி. டெஸ்ட் பந்துவீச்சாளர்களில் 900 புள்ளிகளைக் கடந்த 26 ஆவது வீரராக பும்ரா இணைந்துள்ளார். இந்தப் பட்டியலில் 856 புள்ளிகளுடன் 2 ஆவது இடத்தில் தென் ஆப்பிரிக்காவின் ரபாடாவும், 852 புள்ளிகளுடன் ஆஸ்திரேலிய வீரர் ஹேசில்வுட் 3 ஆவது இடத்திலும் உள்ளனர்.

Comments
0

MOST READ
01
02
03
04
05