விளையாட்டு
ஆஸி வீரருடன் மோதல் - விராட் கோலிக்கு அபராதம்

Dec 26, 2024 - 02:44 PM -

0

ஆஸி வீரருடன் மோதல் - விராட் கோலிக்கு அபராதம்

இந்திய கிரிக்கெட் அணியின் விராட் கோலியின் தவறான நடத்தை காரணமாக அவரது ஊதியத்தில் இருந்து  20 சதவிகிதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

ஐசிசி விதி 2.12இன் படி கிரிக்கெட் ஒருவரை ஒருவர் உடலால் மோதிக்கொள்ளும் விளையாட்டு கிடையாது. 

 

ஆட்டத்தில் உடலை தொடுவதற்கு விதிமுறைகள் இருக்கின்றன. முறையற்ற வகையில் எதிரணியினரின் உடலை தொடுவது விதிமுறையை மீறுவதாகும் எனக் கூறப்பட்டுள்ளது.

 

இந்த விதியின்படி விராட் கோலிக்கு போட்டி ஊதியத்தில் இருந்து 20 சதவிகிதம் அபராதமும் அபராத புள்ளி (டீ மெரிட் பொயிண்ட்) ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது.

 

பாா்டா் - காவஸ்கா் கிண்ண டெஸ்ட் தொடரின் 4-ஆவது ஆட்டமான ‘பொக்ஸிங் டே’ டெஸ்ட்டின் முதல் நாளில் அஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரராக இளம் வீரர் சாம் கொன்ஸ்டாஸ் களமிறங்கினார்.

 

10ஆவது ஓவர் முடிந்த பிறகு சாம் கான்ஸ்டாஸ் கிரீஸிலி இருந்து அந்தப் பக்கம் நடந்துசெல்லும் போது விராட் கோலி வேண்டுமென்றே அவரது பக்கம் வந்து தோள்பட்டையால் இடித்துவிடுவார்.

 

பின்னர் இருவரும் ஏதோ பேச, கவாஜாவும் நடுவரும் வந்து சமாதானம் செய்தார்கள்.

 

மெல்போர்ன் மைதானத்தில் 90,000 மக்களுக்கு மத்தியில் விராட் கோலி அறிமுக வீரரிடம் நடந்துகொண்ட விதம் முகம் சுழிக்க வைக்கிறது.

 

ரிக்கி பொண்டிங், “விராட் கோலி ஒரு பிட்ச் அளவுக்கு தனது வலதுபுறம் நகர்ந்து கான்ஸ்டாஸை இடித்துள்ளார். இதை நடுவர்கள் நிச்சயம் பார்ப்பார்கள். கோலி இதற்கு பதில் சொல்லியே ஆக வேண்டும்” என்றார்.

 

இந்தியாவின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, “ஒரு கோடு இருக்கிறது. அதைத் தாண்டி செல்லக்கூடாது” எனக் கூறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

 

Comments
0

MOST READ
01
02
03
04
05