Dec 27, 2024 - 12:17 PM -
0
கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து அவர் விலகி தற்போது, மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார்.
இறுதி கட்டத்தை நெருங்கிய பிக் பாஸ் 8 ஆம் சீசனில் தற்போது போட்டியாளர்களின் குடும்பத்தினர் வீட்டுக்குள் அனுப்பப்பட்டு வருகின்றனர். குடும்பத்தினரை நீண்ட நாட்களுக்கு பிறகு பார்த்த மகிழ்ச்சியில் போட்டியாளர்களும் ஆனந்த் கண்ணீர் விட்டு வருகின்றனர்.
குடும்பத்தினரை தொடர்ந்து சில போட்டியாளர்களுக்கு நெருக்கமானவர்களை கூட பிக் பாஸ் வீட்டுக்கு அழைத்து வர இருக்கின்றனர். அந்த வகையில், அருண் பிரசாத் உடன் காதலில் இருக்கும் அர்ச்சனா பிக் பாஸ் வீட்டுக்கு வந்து சென்று இருக்கிறார்.
இந்நிலையில், மற்றொரு முக்கிய போட்டியாளரான சௌந்தர்யாவின் காதலர் ஆன நடிகர் விஷ்ணுவும் பிக் பாஸ் வீட்டுக்கு வந்து இருக்கிறார்.
அப்போது, சௌந்தர்யா விஷ்ணுவுக்கு propose செய்துள்ளார். அதனை ஏற்று விஷ்ணு அவருடன் நடனமாடும் அழகிய வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.