Dec 27, 2024 - 01:55 PM -
0
கொமர்ஷல் வங்கியானது, நாட்டில் காணப்படும் விவசாயத்திற்கான அனைத்து சாத்தியமான அம்சங்களையும் உள்ளடக்கி, விவசாயத் துறையில் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்கான ஒரு இலட்சியப் பணியை ஆரம்பித்துள்ளது.
இந்த முன்முயற்சி விவசாய சமூகங்களை மேம்படுத்துவதையும், நிலையான விவசாய நடைமுறைகளை வளர்ப்பதன் மூலம் பயிர் விளைச்சலின் தரம் மற்றும் அளவை மேம்படுத்துவதையும், நவீன விவசாயத்தில் சமீபத்திய வளங்கள் மற்றும் அறிவை கிராமப்புற சமூகங்களுக்கு வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. வங்கியின் இத்திட்டப்பணிக்கு இணங்க இதன் முன்னோடியாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மற்றும் கிளிநொச்சி விவசாயத் திணைக்களத்தின் ஒத்துழைப்புடன் வங்கியினால் பொறுப்பேற்கப்பட்ட முதலாவது கிராமம் கிளிநொச்சியில் அமைந்துள்ள மகிழங்காடு ஆகும்.
இந்த முதலாவது விவசாய நவீனமயமாக்கல் கிராமம் திட்டத்தின் முதல் செயல்விளக்கமாக, இயந்திரமயமாக்கப்பட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நெல் நாற்றுகளை நடும் முறையானது சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிகழ்வில் கிளிநொச்சி பிரதேசத்தைச் சேர்ந்த விவசாயிகள், உள்ளூர் விவசாயிகள் அமைப்பின் உறுப்பினர்கள், அதிகாரிகள் மற்றும் நிபுணர்கள் கலந்து கொண்டனர். மகிழங்காடு கிராமத்தில் நடைபெற்ற இயந்திர தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நெல் நாற்றுகளை நடவு செய்யும் இந்த செயல் விளக்க நிகழ்ச்சியில் ஏராளமான உள்ளூர் விவசாயிகள் அமைப்புகள் மற்றும் விவசாய மேம்பாட்டுடன் தொடர்புடைய நிறுவனங்களின் அலுவலர்கள் கலந்து கொண்டனர். இந்த முயற்சி குறித்து கருத்து தெரிவித்த கொமர்ஷல் வங்கியின் தனிப்பட்ட வங்கியியல் பிரிவின் பிரதிப் பொது முகாமையாளர் திரு திலக்ஷன் ஹெட்டியாராச்சி, 'கிராமிய சமூகங்களுக்கான கொமர்ஷல் வங்கியின் அபிவிருத்திக் கடன் பிரிவின் இந்த நவீனமிகு மாற்றத்திற்கான முயற்சியானது பாரம்பரிய விவசாய முறைகள் மற்றும் புதுமையான தொழில்நுட்பங்களுக்கு இடையிலான இடைவெளியைக் குறைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது விவசாயத் துறையில் புரட்சியை ஏற்படுத்தும் என்று நாங்கள் நம்புகிறோம், மேலும் இந்த திட்ட முயற்சியானது அடுத்த தலைமுறையினரை ஸ்மார்ட் விவசாய நடைமுறைகளை மேற்கொள்வதற்கு தூண்டும் என எதிர்பார்க்கலாம்.
கொமர்ஷல் வங்கியானது உலகின் தலைசிறந்த 1000 வங்கிகளில் பட்டியலிடப்பட்ட முதல் இலங்கை வங்கியாகும், மேலும் கொழும்பு பங்குச் சந்தையில் வங்கித் துறையில் அதிக சந்தை மூலதனத்தைக் கொண்டுள்ளது. வங்கியானது இலங்கையின் சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சி (SME) துறைக்கு மிகப்பெரிய கடனுதவி வழங்குவதோடு, டிஜிட்டல் புத்தாக்கங்களில் முன்னணியில் உள்ளது. மற்றும் இலங்கையின் முதல் 100மூ கார்பன்நடுநிலைமை வங்கியாகும். கொமர்ஷல் வங்கியானது நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள கிளைகள் மற்றும் தானியங்கி இயந்திரங்களின் வலையமைப்பைச் செயல்படுத்துகிறது, மேலும் இலங்கை வங்கிகளுக்கிடையில் பரந்த சர்வதேச வலையமைப்பைக் கொண்டுள்ளது, பங்களாதேஷில் 20 வங்கிக்கிளைகள், மியன்மாரில் ஒரு நுண்நிதி நிறுவனம் மற்றும் மாலைத்தீவில் பெரும்பான்மையுடன் கூடிய முழு அளவிலான முதற்தர வங்கி ஆகியவையாகும்.