செய்திகள்
வரலாறு படைத்த நாசாவின் பார்க்கர் விண்கலம்

Dec 27, 2024 - 04:48 PM -

0

வரலாறு படைத்த நாசாவின் பார்க்கர் விண்கலம்

நாசா விண்கலம் ஒன்று சூரியனுக்கு மிக அருகில் நெருங்கிச் சென்று, ஒரு புதிய வரலாறு படைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.


பார்க்கர் விண்கலம் (Parker Solar Probe) எனப்படும் அந்த ஆளில்லா விண்கலம் சூரியனின் அதீத வெப்பம் மற்றும் தீவிர கதிர்வீச்சை தாங்கிக்கொண்டு, அதன் வெளிப்புற வளிமண்டலத்தில் நுழைந்துள்ளது.


அதீத வெப்பம் நிலவும் இடத்தில் இந்த விண்கலம் இருப்பதால், பல நாட்களாக இதனுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டிருந்தது.


இந்நிலையில், மேரிலாந்தில் உள்ள ஜான்ஸ் ஹாப்கின்ஸ் அப்ளைடு இயற்பியல் ஆய்வகத்தில் உள்ள செயல்பாட்டுக் குழு, வியாழன் நள்ளிரவுக்கு சற்று முன்பு ஆய்வில் இருந்து ஒரு பீக்கான் டோன் என்ற சமிக்ஞையைப் பெற்றதாக நிறுவனம் குறிப்பிட்டது.


விண்கலம் அதன் நிலை குறித்த விரிவான டெலிமெட்ரி தரவை ஜனவரி 1 ஆம் திகதி அனுப்பும் என்று நாசா மேலும் தெரிவித்தது.


430,000 mph (692,000 kph) வேகத்தில் நகரும் இந்த விண்கலம் குறிப்பாக, 1,800 டிகிரி ஃபாரன்ஹீட் (980 டிகிரி செல்சியஸ்) வெப்பநிலையைத் தாங்கியது என்று நாசா இணையதளம் தெரிவித்துள்ளது.

 

Comments
0

MOST READ
01
02
03
04
05