Dec 28, 2024 - 05:51 PM -
0
களனி கங்கையில் ஏற்படும் வெள்ளப்பெருக்கினால் கடுவெல மாநகர சபைக்குட்பட்ட பகுதிகள் வௌ்ளத்தில் மூழ்குவதைக் கட்டுப்படுத்த பல்வேறு விசேட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதன்படி நேற்று (27) முதல் அமுலுக்கு வரும் வகையில் தாழ்வான பகுதிகளில் மண் நிரப்புதல் மற்றும் அதனுடன் தொடர்புடைய பகுதிகளில் மணல் அகழ்வு நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடுவெல பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டதாக அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அசித நிரோஷன தெரிவித்தார்.
அம்பத்தளை நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு அருகாமையில் கட்டப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அணையினால் வெள்ள நிலைமையின் போது பாரிய பாதிப்புக்கள் ஏற்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக, உலக வங்கியின் வேலைத்திட்டத்தின் கீழ், குறித்த நிரந்தர நீர் அணைக்கு பதிலாக தானியங்கி நீர் அணை அமைக்கும் திட்டம் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

