Header Logo

செய்திகள்
G7 நாடுகளின் திடீர் முடிவால் மசகு எண்ணெய் விலையில் வீழ்ச்சி

Mar 9, 2026 - 12:48 PM -

0

G7 நாடுகளின் திடீர் முடிவால் மசகு எண்ணெய் விலையில் வீழ்ச்சி

உலகச் சந்தையில் மசகு எண்ணெய் விலை 2022-ஆம் ஆண்டிற்குப் பின்னர் முதன்முறையாக ஒரு பீப்பாய் 100 அமெரிக்க டொலரையும் தாண்டியுள்ளது. 

இது குறித்து விவாதிக்க G7 நாடுகளின் நிதியமைச்சர்கள் அவசரக் கூட்டம் ஒன்றை நடத்த உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

விலை உயர்வுக்குத் தீர்வாக, அவசரகால எரிபொருள் இருப்புகளை சந்தையில் வெளியிடும் முன்மொழிவு குறித்து அவர்கள் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

இந்த முன்மொழிவுக்கு அமெரிக்கா ஏற்கனவே தமது ஆதரவை தெரிவித்துள்ளதாக ஊடக அறிக்கைகள் குறிப்பிடுகின்றன. 

கனடா, பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, ஜப்பான், பிரித்தானியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் G7 அமைப்பில் அங்கத்துவம் வகிக்கின்றன. 

எவ்வாறாயினும், இந்தச் செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து, உலகச் சந்தையில் மசகு எண்ணெய் விலை ஒரு பீப்பாயர் ஒன்றின் விலை 117.65 அமெரிக்க டொலரில் இருந்து 104 டொலராக குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.

Comments
0

MOST READ

காணொளி
செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் 11 ஆவது நாள்!

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் 11 ஆவது நாள்!

ஏற்கனவே சாய்ந்தமருது நகரசபை உருவாகி விட்டது!

ஏற்கனவே சாய்ந்தமருது நகரசபை உருவாகி விட்டது!

சிறுவர்களின் எச்சங்களும் மீட்பு!

சிறுவர்களின் எச்சங்களும் மீட்பு!

ஹஜ்ஜுப் பெருநாள் என்பது தியாகத்தின் பெருநாளாகும்!

ஹஜ்ஜுப் பெருநாள் என்பது தியாகத்தின் பெருநாளாகும்!

தோற்றுப்போனவர்கள் எங்களுக்கு சவால் விடுகிறார்கள்!

தோற்றுப்போனவர்கள் எங்களுக்கு சவால் விடுகிறார்கள்!

மக்களுடைய காணிகளை மக்களுக்கே வழங்க வேண்டும்!

மக்களுடைய காணிகளை மக்களுக்கே வழங்க வேண்டும்!

2 மாதங்களுக்குள் எல்லை நிர்ணயம் செய்ய வேண்டும்!

2 மாதங்களுக்குள் எல்லை நிர்ணயம் செய்ய வேண்டும்!

மூன்றாம் கட்ட அகழ்வுப்பணியின் 9 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப்பணியின் 9 ஆம் நாள்!

மட்டக்களப்பையும் தமிழகத்திற்கு கொடுத்து விடுங்கள்!

மட்டக்களப்பையும் தமிழகத்திற்கு கொடுத்து விடுங்கள்!

விஜய் இலங்கை வருவார் என நம்புகிறோம்!

விஜய் இலங்கை வருவார் என நம்புகிறோம்!

title