செய்திகள்
சீதுவ துப்பாக்கிச் சூடு - காயமடைந்த ஒருவர் மரணம்

Dec 28, 2024 - 08:00 PM -

0

சீதுவ துப்பாக்கிச் சூடு - காயமடைந்த ஒருவர் மரணம்

சீதுவ- வெலிபொட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த மூவரில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


இன்று (28)  இடம்பெற்ற மேற்படி துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் காயமடைந்திருந்தனர்.


காயமடைந்த மூவரும் நீர்கொழும்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஒருவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.


காரில் வந்த சிலர் துப்பாக்கிச் சூடு நடத்தியதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

Comments
0

MOST READ
01
02
03
04
05