Dec 28, 2024 - 09:22 PM -
0
ஜேர்மனியின் பொருளாதாரத்தை எவ்வாறு மீட்பது என்பது தொடர்பாக ஏற்பட்ட கருத்து மோதலில் நிதியமைச்சரை பிரதமர் ஓலாப் பதவி நீக்கம் செய்தார்.
இதன் காரணமாக கடந்த 6ஆம் திகதி அவரது மூன்று கட்சிக்கூட்டணியில் விரிசல் ஏற்பட்டது.
இந்நிலையில் நாடாளுமன்றத்தில் கடந்த 16ஆம் திகதி பிரதமர் ஓலாப் ஸ்கோல்சுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி பெற்றது.
இந்த நிலையில் ஜேர்மனி நாடாளுமன்றத்தை கலைத்து ஜனாதிபதி பிராங்க் வால்டர் நேற்று உத்தரவிட்டார். மேலும் பாராளுமன்றத்துக்கான புதிய தேர்தலை பெப்ரவரி 23ஆம் திகதி நடத்தவும் உத்தரவிட்டுள்ளார்.