செய்திகள்
ரயிலில் மோதி நபரொருவர் மரணம்

Dec 29, 2024 - 08:48 AM -

0

ரயிலில் மோதி நபரொருவர் மரணம்

மருதானையில் இருந்து காலி நோக்கி பயணித்த இரவு நேர தபால் ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.


குறித்த நபர் நேற்றிரவு அம்பலாங்கொட தர்மசோக வித்தியால மாவத்தையில் உள்ள புகையிரத கடவைக்கு அருகில் இவ்வாறு ரயிலில் மோதி உயிரிழந்துள்ளார்.


உயிரிழந்தவர் அம்பலாங்கொடை பகுதியைச் சேர்ந்த 54 வயதுடையவர்.


உயிரிழந்தவரின் மனைவி முன்னர் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளதாகவும் அதன் காரணமாகவே அவர் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பலாங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Comments
0

MOST READ
01
02
03
04
05