Header Logo
SLIC
மலையகம்
நுவரெலியாவில் மட்டக்குதிரை தாக்கியதில் சிறுவன் காயம்!

Dec 29, 2024 - 03:29 PM

நுவரெலியாவில் மட்டக்குதிரை தாக்கியதில் சிறுவன் காயம்!
Mobitel Inner 1278
EDEX Inner

நுவரெலியா கிரகரி வாவிக்கரையோரத்தில் நேற்று (28) மாலை மட்டக்குதிரை ஒன்று தாக்கியதால் நெஞ்சு பகுதியில் ஏற்பட்ட  காயத்துடன் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக சென்ற சம்பவம் பதிவாகியுள்ளது.

வருட இறுதி என்பதால் தினமும் ஆயிரக்கணக்கான உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பயணிகள் நுவரெலியாவிற்கு வந்து செல்கின்றனர். அவ்வாறு வகை தந்த உள்நாட்டு சுற்றுலா பயணிகள் கிரகரி வாவி கரையோர வீதியில் நடந்து சென்ற போது  சவாரிக்காக கொண்டு வரப்பட்ட மட்டக்குதிரை ஒன்று திடீரென சிறுவனை தாக்கி காயப்படுத்தியதாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.

அதன் பின்னர் குறித்த பகுதியில் பாதுகாப்பு கடமையில் இருந்த நுவரெலியா பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்களிடம் முறைப்பாடு செய்து சிறுவனை தாக்கிய மட்டக்குதிரையின் உரிமையாளர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக நுவரெலியாவில் சுற்றி திரியும் மட்டக்குதிரைகள் பிரதான வீதிகளில்  தாறுமாறாக ஓடி சுற்றுலா பயணிகளை உதைப்பதும், கடிப்பதும் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றது இதன் காரணமாக நுவரெலியாவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

எனவே வீதிகளில் சுற்றித்திரியும் மட்டக்குதிரைகளை அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இப்பிரச்சினையின் தீவிரத்தை உணர்ந்து மட்டக்குதிரை வளர்ப்போருக்கு உரிய விழிப்புணர்வை ஏற்படுத்தி, அதையும் மீறும் பட்சத்தில் மட்டக்குதிரையை பறிமுதல் செய்து அதிகரித்த தண்டப்பணத்தை விதிக்க வேண்டும் என பொது மக்களும், வாகன சாரதிகளும் கோரிக்கை விடுக்கின்றனர்.

MOST READ

காணொளி
மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

Mobitel 1278